

நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், மால்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எந்த மாதிரியான உடை அணிந்து வரவேண்டும் என்ற விதி வகுத்துள்ளன.
நமது பாரம்பரிய உடைகள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. செருப்பு அணிந்து செல்லக்கூடாது ஷீ அணிந்து சென்றால்தான் அனுமதி கிடைக்கும். இதனால் சாதாரண உடை அணிந்தவர்கள் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புக்குள் செல்ல முடியாது.
சென்னையில் சில வருடங்களுக்கு முன் வேட்டி அணிந்த பத்திரிகையாளர் ஒருவர் நட்சத்திர ஓட்டலுக்குள் செல்ல அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபோல் கொல்கத்தாவில் உள்ள ஆடம்பர கிளப் ஒன்றுக்கு சென்ற வங்காள சினிமா டைரக்டர் ஆஷிஷ் அவிகுந்தக்கிற்கு கிளப் நிர்வாகம் அனுமதி மறுத்தது. அவர் வேட்டியும் குர்தாவும் அணிந்து இருந்தார். நீளமான தலைமுடியும் வைத்து இருந்தார்.
அவரது தோற்றத்தைப் பார்த்த ஊழியர்கள் கிளப்புக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். லுங்கி, வேட்டி அணிந்து உள்ளே வரக்கூடாது என்று தெரிவித்தனர்.
அவர்களிடம் அவர் ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்தார். தான் யார் என்பதை ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதன்பிறகு அனுமதிக்கப்பட்டார்.