

இந்தியாவில் கடந்த 1-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. என்றாலும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளன. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று ஏற்படாமலும் இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக தொற்று ஏதும் இல்லை. நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இதுவரை தொற்று ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாநிலங்களுக்கு இதுவரை 72 லட்சம் N95 முகக்கவசங்கள் மற்றும் 36 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.