மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை: இறுதிபோட்டிக்கு நீத்து, சாக்‌ஷி சவுத்ரி முன்னேற்றம்

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை: இறுதிபோட்டிக்கு நீத்து, சாக்‌ஷி சவுத்ரி முன்னேற்றம்

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு நீத்து மற்றும் சாக்‌ஷி சவுத்ரி ஆகியோர் முன்னேறினர்.
Published on

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். நேற்று அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நீத்து, சீனாவின் நியி யூவானை 4-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 54 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, ஜப்பானின் ஐரி செனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com