ரஜினிக்கு, பாரதிய ஜனதாவே பொருத்தமான இடமாக இருக்கும்: நிதின்கட்காரி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு பொருத்தமான இடம் பாரதிய ஜனதா மட்டும்தான் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு, பாரதிய ஜனதாவே பொருத்தமான இடமாக இருக்கும்: நிதின்கட்காரி
Published on

மும்பை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கப்போவதாக மறைமுகமாக சொல்லி வருகிறார். எனவே அவர் அரசியல் கட்சி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை பாரதிய ஜனதா கட்சியில் சேரும்படி கட்சி தலைவர் அமித்ஷா ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய மந்திரியுமான நிதின்கட்காரியும் ரஜினிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடிவெடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். அவர் மிக சிறந்த மனிதர். அவர் அரசியலுக்கு நிச்சயம் வர வேண்டும்.

ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு பொருத்தமான இடம் பாரதிய ஜனதா மட்டும்தான். எனவே அவர் பாரதிய ஜனதாவுக்கு வரவேண்டும். ரஜினிக்கு அழைப்பு விடுப்பதற்கு எனக்கு தனிப்பட்ட அதிகாரமோ அல்லது முடிவு எடுக்கும் பொறுப்போ என்னிடம் இல்லை.

இதுபற்றி கட்சி தலைவர் அல்லது பாராளுமன்ற போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனாலும் ரஜினி மராட்டியர் என்ற முறையில் நான் அவரை அழைக்கிறேன்.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com