நாடு முழுவதும் கான்கிரீட் சாலைகள் போடப்படும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு

நாட்டில் உள்ள அனைத்து சாலைகளும் சிமெண்டு கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படும் என மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கான்கிரீட் சாலைகள் போடப்படும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு
Published on

மராட்டிய மாநிலம் நவிமும்பை வாஷியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

மும்பையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு கான்கிரீட் சாலைகள் இன்னமும் நல்ல வடிவத்தில் இருக்கின்றன. ஆனால், சில அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் இதுபோன்ற சாலைகளை மும்பையில் அமைக்க விரும்பவில்லை. அவர்களை பொறுத்தவரையில், தார் சாலைகளை போட்டு அவ்வப்போது குண்டும், குழியுமாக சாலைகள் காட்சியளிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

நாட்டில் உள்ள அனைத்து சாலைகளும் சிமெண்டு கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படும். இந்த சாலைகள் 200 ஆண்டுகள் உறுதித்தன்மையுடனும், நீடித்த ஆயுளுடன் காணப்படும் என்று என்னால் உறுதி அளிக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com