இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிசான் கிக்ஸ்

நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இதன் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. #Nissan #kicks
இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிசான் கிக்ஸ்
Published on

நிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. தற்போதைய டெரானோ மாடலுக்கு மாற்றாக அமையலாம் என கூறப்படுகிறது.

நிசான் கிக்ஸ் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனையாகி வரும் நிலையில், இதன் இந்திய வெர்ஷன் வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. நிசான் டெரானோ போன்றே புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலும் B0 பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: Power Stroke PS

புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் தயாரிப்பு பணிகள் சென்னையில் இயங்கி வரும் ஆலையில் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலில் வி-மோஷன் கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., 17-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

புதிய நிசான் கிக்ஸ் ஒரு மாதத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நிசான் விற்பனை எதிர்பார்த்த அளவு அதிகமாக இல்லாத நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மூலம் நிசான் தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும். #Nissan #kicks

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com