ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை 1-0 என வீழ்த்தியது பெங்களூரு எப்.சி

பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு எப்.சி அணியினர்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு எப்.சி அணியினர்
Published on

பெங்களூரு:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூருவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் நிஷு குமார் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். அதன்பின்னர், ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் கிடைக்கவில்லை.

இறுதியில், பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com