அமெரிக்க ஓபன் - கோல்ஸ்கரைபரை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார் நிஷிகோரி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிலிப் கோல்ஸ்கரைபரை வீழ்த்திய கெய் நிஷிகோரி காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
அமெரிக்க ஓபன் - கோல்ஸ்கரைபரை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார் நிஷிகோரி
Published on

நியூயார்க்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஜப்பானை சேர்ந்த கெய் நிஷிகோரியும், ஜெர்மனியை சேர்ந்த பிலிப் கோல்ஸ்கிரைபரும் மோதினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நிஷிகோரி அபாரமாக ஆடினார். இதனால் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டும் என இருவரும் தீவிரமாக ஆடினர். ஆனால், நிஷிகோரி திறமையாக விளையாடி 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்றார்.

மூன்றாவது சுற்றில் கோல்ஸ்க்ரைபர் சற்று நெருக்கடி தந்தாலும், சுதாரித்துக் கொண்ட நிஷிகோரி மூன்றாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், நிஷிகோரி 6-3 6-2 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் நிஷிகோரி மரின் சிலிச் அல்லது டேவிட் கோல்பினுடன் மோதுகிறார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com