

மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. தீயை கக்கும் எரிமலைகள் மற்றும் ஏராளமான தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஹவாய் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாக ஓவாஹு விளங்கி வருகிறது.
ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான இரட்டை என்ஜின் விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலானது.