மேரிகோமுக்கு நான் எதிரானவள் அல்ல- ஜரீன்

மேரிகோம் ஒரு ஜாம்பவான். நான் அவருக்கு எதிரானவள் அல்ல அவர் முன் நாங்கள் எல்லாம் கத்துகுட்டிகள் என்று நிகாத் ஜரீன் கூறினார்.
நிகாத் ஜரீன்
நிகாத் ஜரீன்
Published on

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும் இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் நடந்த தகுதி போட்டியில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், ‘இளம் புயல்’ நிகாத் ஜரீனை எளிதில் வீழ்த்தினார். தன்னை பலமுறை வெளிப்படையாக விமர்சித்ததால் ஆத்திரமடைந்த மேரிகோம் போட்டி முடிந்த பிறகு அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்தார். அவர் மீதும் சாடினார்.

இந்த சர்ச்சை குறித்து 23 வயதான நிகாத் ஜரீன் நேற்று கூறுகையில், ‘மேரிகோம் இந்த அளவுக்கு கோபம் அடைவார் என்று எதிர்பார்க்கவில்லை. தகுதி போட்டி நேர்மையாக, முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று தான் போராடினேன். முன்பு கடைபிடிக்கப்பட்ட இதற்கான நடைமுறையைத்தான் நான் எதிர்த்தேனே தவிர மேரிகோமை அல்ல. மேரிகோம் ஒரு ஜாம்பவான். எனவே அவர் தகுதி போட்டியை கண்டு பயப்படக்கூடாது. அவர் முன் நாங்கள் எல்லாம் கத்துகுட்டிகள். அவர் எப்போதும் தகுதி போட்டிக்கு தயாராக இருந்து, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com