கர்நாடக சிறைகளில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்: அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கர்நாடக சிறைகளில் உள்ள கைதிகள் 32 பேர் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுடன் வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சிறைத் துறையின் 2 மூத்த அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக சிறைகளில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்: அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Published on

 பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், பல்லாரி, பலகேவி மற்றும் தவனங்கேர் சிறைகளில் உள்ள குற்றவாளிகள் 32 பேர் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் இரவோடு இரவாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.  

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சிறைத் துறையின் 2 மூத்த அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முன்னதாக, பா.ஜ.க. எம்.பி. ஷோபா கரந்தலஜே நேற்று அளித்துள்ள புகாரில் சிறையில் உள்ள தனது குடும்பத்தைச் சேர்ந்த கைதிகளை பார்க்க அனுமதி தரப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பல்லாரி மற்றும் பெலகாவி சிறைகளில் இருந்து கடந்த 16-ம் தேதி கைதிகள் திடீரென மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை ஏற்றுக் கொண்டு சிறைத்துறையைச் சேர்ந்த டிஜிபி மற்றும் ஐ.ஜி.க்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூபா சிறையில் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் பேச மறுக்கப்பட்டதாக கூறி தர்ணாவில் ஈடுபட்ட கைதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com