

இந்திய அணியில் தற்போது தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் விளையாடவில்லை என்றால் லோகேஷ் ராகுல் அந்த இடத்திற்கு தயாராக உள்ளார். அதேபோல் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் ஒருவர் விளையாடவில்லை என்றால், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் என வீரர்கள் தயாராக உள்ளனர்.
இதேபோல் வேகப்பந்து வீச்சில் தற்போது புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டாலோ, ஓய்வு கொடுத்தாலோ டி20 அல்லது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
இதனால் 2019 உலகக்கோப்பைக்கு முன்பு பேக்-அப் வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்வதுதான் அடுத்த இலக்கு என இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரத் அருண் கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சின் பெஞ்ச் பலத்தை பரிசோதித்து பார்ப்பதற்கு டி20 முத்தரப்பு தொடர் நல்ல வாய்ப்பு. நாங்கள் உலகின் தலைசிறந்த வீரர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை பெற்றுள்ளோம். ஆனால் மேலும் சிறந்த குழுவை விருவாக்க விரும்புகிறோம். இலங்கை தொடர் மொகமது சிராஜ், ஷர்துல் தாகூர் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோருக்கு சிறந்த வாய்ப்பு.