மணமேடையில் வாளால் ‘கேக்’ வெட்டிய புதுமண தம்பதி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி

பூந்தமல்லி அருகே மணமேடையில் புதுமணத் தம்பதி வாளால் கேக் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மணமேடையில் வாளால் கேக் வெட்டிய புதுமண தம்பதி
மணமேடையில் வாளால் கேக் வெட்டிய புதுமண தம்பதி
Published on

மாங்காடு அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபல ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் வாளால் கேக் வெட்டி கொண்டாடினான்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி பினு ஸ்டைலில் அரிவாளால் கேக் வெட்டும் சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மணமேடையில் புதுமணத் தம்பதி வாளால் கேக் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த திருமணம் திருவேற்காடு அருகே நடந்ததாக தெரிகிறது. மணமக்களின் கையில் நீண்ட வாளைக் கொடுத்து கேக் வெட்டுமாறு நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com