சிட்னி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்டிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு

மெல்போர்ன் டெஸ்டின்போது காயமடைந்த டிரென்ட் போல்ட் தொடரில் இருந்து விலகியதால் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சோமர்வில்
சுழற்பந்து வீச்சாளர் சோமர்வில்
Published on

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடக்கிறது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்டுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் சிட்னி போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதில் 35 வயது சுழற்பந்து வீச்சாளரான சோமர்வில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சோமர்வில் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார்.

சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது நியூசிலாந்து.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com