“புதிய செருப்பு கடிக்கவே செய்யும்”: ஜி.எஸ்.டி.க்கு ஆதரவாக மத்திய மந்திரி கருத்து

நீங்கள் புதிய செருப்பு வாங்கும்போது, முதலில் சில நாட்களுக்கு கடிக்கவே செய்யும் பிறகு அணிவதற்கு வசதியாக இருக்கும் என ஜி.எஸ்.டி.க்கு ஆதரவாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
“புதிய செருப்பு கடிக்கவே செய்யும்”: ஜி.எஸ்.டி.க்கு ஆதரவாக மத்திய மந்திரி கருத்து
Published on

இந்தூர்:

மத்திய திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நேற்று மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே ஒரு விழாவில் பங்கேற்றபோது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகள் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

நீங்கள் புதிய செருப்பு வாங்கும்போது, முதலில் சில நாட்களுக்கு கடிக்கவே செய்யும். பிறகு அணிவதற்கு வசதியாக இருக்கும். அதுபோல்தான் இதுவும். இந்த நடவடிக்கைகளால், வேலைவாய்ப்பு பறிபோய் விட்டதாக தேவையின்றி ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.

நாட்டை 3 தலைமுறைகளாக ஆண்டவர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. யால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. யை ‘கப்பர்சிங் டேக்ஸ்’ என்று ராகுல் காந்தி கூறியிருப்பது, அவரது அநாகரிக போக்கை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com