2018 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதியில் அதிரடி மாற்றம் செய்யும் எல்ஜி

எல்ஜி நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியில் அதிரடி மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல்களில் எல்ஜி G7 புதிய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது.
2018 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதியில் அதிரடி மாற்றம் செய்யும் எல்ஜி
Published on

சீயோல்:

எல்ஜி நிறுவனத்தின் 2018 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் எல்ஜி G7 அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

எல்ஜி நிறுவனம் தனது G6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை மார்ச் மாதம் வெளியிட்டது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இது எல்ஜியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனையை பாதிக்க செய்தது. அதிசிறந்த சிறப்பம்சங்களை கொண்டிருந்த போதும், கேலக்ஸி S8 விற்பனையில் முன்னிலை பெற்றுள்ளது.  

இதனிடையே வீண் போட்டியை தவிர்க்க எல்ஜி நிறுவனம் தனது G7 ஸ்மார்ட்போனினை முன்னதாகவே வெளியிடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய எல்ஜி G7 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படலாம் என கூறப்பட்டது. மேலும் புதிய எல்ஜி G7 ஸ்மர்ட்போனின் துவக்க பணிகள் மே 2017-இல் துவங்கிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

எல்ஜி G7 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் சொந்த டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும் இது செயற்கை நுண்ணறிவு சார்ந்து செயல்படும் படி உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் எல்ஜி நிறுவனத்தின் V30 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு எல்ஜி V20 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டதை விட இந்த ஆண்டு முன்னதாகவே வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

புதிய எல்ஜி V30 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர், டி.ஏ.சி. ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் மெட்டாலிக் வடிவமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com