நோக்கியா 3, 5, 6 இந்திய விலை இணையத்தில் வெளியானது

உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் ஜூன் 13-ந்தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவற்றின் விலை இணையத்தில் வெளியாகியுள்ளது.
நோக்கியா 3, 5, 6 இந்திய விலை இணையத்தில் வெளியானது
Published on

புதுடெல்லி:

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை ஜூன் 13-ந்தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டிற்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் இவற்றின் விலை இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. 

நோக்கியா-பவர்-யூசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பட்ஜெட் ரகத்திலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நோக்கியா 3 இந்திய விலை சுமார் 9,000 முதல் 12,000 ரூபாய், நோக்கியா 5 இந்திய விலை சுமார் 15,000 மற்றும் நோக்கியா 6 விலை ரூ.16,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விலையுடன் ஒப்பிடும் போது இந்திய விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். 

நோக்கியா 3:

5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

நோக்கியா 5:

5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

நோக்கியா 6:

5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com