அமெரிக்க அதிபர் தேர்தல்- ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இணைந்த கோரி புக்கர்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நியூ ஜெர்சி எம்பி கோரி புக்கரும் இணைந்துள்ளார். #USPresidentElection #CoryBooker
அமெரிக்க அதிபர் தேர்தல்- ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இணைந்த கோரி புக்கர்
Published on

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த கட்சி தயாராகி வருகிறது.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரன், நியூயார்க் செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட், ஜூலியன் கேஸ்ட்ரா உள்ளிட்ட மேலும் சிலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.  

அந்த வரிசையில் தற்போது நியூ ஜெர்சி செனட்டரான கோரி புக்கரும் (வயது 49) இணைந்துள்ளார். அத்துடன், வீடியோ மூலம் தனது பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளார். அந்த வீடியோவில், தான் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை மற்றும் தனது அரசியல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com