ஹர்ஷா போக்லேவால் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவை சதோதரர் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். #RashidKhan #HarshaBhogle
ஹர்ஷா போக்லேவால் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட ரஷித் கான்
Published on

டேராடூன்:

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் வங்காளதேசம் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியையும், ரஷித் கானின் சிறப்பாக பந்துவீச்சையும் பாராட்டும் வகையில், பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த ரஷித் கான், ஹர்ஷா போக்லேவை சகோதரர் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அப்பா வயது உடையவரை எப்படி சகோதரர் என கூப்பிடுவது என இந்திய ரசிகர்கள் ரஷித் கானிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். மேலும் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்குமாறும் சிலர் கேட்டுக்கொண்டுள்ளனர். #RashidKhan #HarshaBhogle

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com