

எட்டி எனப்படும் பனிமனிதன் இமயமலை பனிபிரதேசங்களில் வாழ்வதாக பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் பனி மனிதனை கடவுளாகவே நினைக்கின்றனர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் சமீபத்தில் இமய மலையில் ஏறும் போது மர்மமான முறையில் காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர்.
அவை அளவில் மிக பெரிதாக இருந்துள்ளன. அவற்றை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று அறிவித்து அண்மையில் டுவிட் ஒன்றை வெளியிட்டனர். மகாலு முகாம் அருகே எட்டி காலடித்தடம் தென்பட்டதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது.