‘நீட்’ தேர்வில் விலக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசை அலைக்கழிக்கும் மத்திய அரசு

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா தொடர்பான கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
‘நீட்’ தேர்வில் விலக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசை அலைக்கழிக்கும் மத்திய அரசு
Published on

மத்திய உள்துறை மந்திரி, மத்திய சுகாதாரத் துறை மந்திரி உள்ளிட்டவர்களை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

பின்னர் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க இந்த ஆவணங்கள் போதாது. கூடுதல் ஆவணங்கள் தேவை என்றும் அவற்றை தாக்கல் செய்யுமாறும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாருஷ்ணனிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

வரைவு மசோதா மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டம் உடனடியாக வெளியிடப்படும்.

இதன் மூலம் பல மாதங்களாக நீடித்த ‘நீட்’ பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிட்டால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ‘கட்ஆப்’ மார்க் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com