நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

நீட் பொது நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. #NEET
நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்
Published on

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு மாறாக தற்போது வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.


இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வு வயது உச்ச வரம்பு தொடர்பான சிபிஎஸ்இ அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம் பொதுப் பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் நுழைவுத் தேர்வை எழுத முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com