மோசமான வானிலை: லக்னோவில் அவசரமாக தரையிறங்கிய சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம்

இந்த விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
China Southern airlines Flight
Published on

காத்மாண்டுவில் மோசமான வானிலை காரணமாக சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது

காத்மாண்டு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரையிறக்கம்:

"காத்மாண்டுவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, இரவு 10.57 மணிக்கு சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 3067 (ஏர்பஸ் A320neo) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் இரவு 11.18 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது" என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவின் குவாங்சூவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், நேபாள தலைநகரில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்று அவர்கள் கூறினர். இவ்விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் மாயம்:

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த, பாகிஸ்தானிய சரக்கு விமானம் காணாமல் போன சம்பவம் அரங்கேறியது. இதனை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்து இருந்தது. காணாமல் போன விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர்.

காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

மேலும், இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய் கிழமை இரவு 9.18 மணிக்கு நேவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் ஆணையம் தெரிவித்து இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com