மம்தா வீட்டின் வெளியே திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மீது முட்டைகள் வீச்சு - வீடியோ வைரல்

இது பொதுமக்களின் கோபம் அல்ல. எங்களை அச்சுறுத்துவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்
மம்தா வீட்டின் வெளியே திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மீது முட்டைகள் வீச்சு - வீடியோ வைரல்
Published on

கொல்கத்தா: மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் நேற்று மம்தா பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் நடைபெறவிருந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார்.

பெலேகட்டா எம்எல்ஏவாக உள்ள இவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.

முட்டை வீச்சு

அவர் காரை விட்டு இறங்கி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் திடீரென குணால் கோஷை நோக்கி முட்டைகளை வீசினார். இதில் ஒரு முட்டை நேரடியாக அவரது தலையில் பட்டு உடைந்தது.

நாடகம்

இந்த சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குணால் கோஷ், "இதுபோன்ற குரங்கு வித்தைகள் மூலமாக என் குரலையோ, எங்கள் கட்சியையோ யாராலும் ஒடுக்கிவிட முடியாது. இது பொதுமக்களின் கோபம் அல்ல. எங்களை அச்சுறுத்துவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்" என தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது அண்மைக் காலமாக இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com