கண்ணாடியில் சோனுசூட் உருவத்தை வரைந்த வாலிபர்

சாந்தனு தேஷ்முக் என்ற வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.தனித்துவமான வகையில் காட்சிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
கண்ணாடியில் சோனுசூட் உருவத்தை வரைந்த வாலிபர்
Published on

பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான செய்களையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சாந்தனு தேஷ்முக் என்ற வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கண்ணாடி துண்டுகளில் சோனுசூட்டின் உருவத்தை வரைந்துள்ளார். அவற்றை சீராக அடுக்கி தனித்துவமான வகையில் காட்சிப்படுத்திய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த சமூக வலைதள பயனர்கள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com