‘தவறான எண்ணிற்கு அழைத்துள்ளீர்கள், சென்று போராட்டம் நடத்துங்கள்’: இட ஒதுக்கீடு தொகுதிகள் தொடர்பாக தொடரப்பட்ட மனுமீது நீதிபதி சூர்யகாந்த் கருத்து!

சட்டத்தில் இல்லாத ஒரு சுழற்சி முறையை நீதிமன்றம் தன்னிச்சையாக உருவாக்க முடியாது என நீதிபதி அமர்வு தெரிவிப்பு.
‘தவறான எண்ணிற்கு அழைத்துள்ளீர்கள், சென்று போராட்டம் நடத்துங்கள்’: இட ஒதுக்கீடு தொகுதிகள் தொடர்பாக தொடரப்பட்ட மனுமீது சூர்யகாந்த் கருத்து!
Published on: 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீடு தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றக் கோரிய மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், “நீங்கள் தவறான எண்ணை அழைக்கிறீர்கள், இது போராட்டங்களின் காலம்; நீங்களும் போராடலாம்” என தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள 191-காதிப்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் சிங் என்ற வாக்காளர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், காதிப்பூர் தொகுதி 1972 முதல் பட்டியல் சாதி (SC) பிரிவினருக்கு மட்டுமே தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பயனடைவதாகவும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்களைப் போல சட்டமன்றத் தொகுதிகளையும் சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

தொகுதி வரையறை ஆணையம் 2008ம் ஆண்டு வெளியிட்ட பரிந்துரைகளை மேற்கோள்காட்டி, இந்த சுழற்சி முறையை கோரியிருந்தார்.

மூன்றாம் அவையின் பங்கை நாங்கள் ஆற்றமுடியாது

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தநிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்து, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி

“கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தங்கள் குரலை உயர்த்தி, நாடாளுமன்றம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று சொல்ல வேண்டும்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து தொகுதி இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பும், நாடாளுமன்றமும் பரிசீலிக்க வேண்டிய ஒரு விடயம் என தெரிவித்த நீதிபதி பக்சி,

“தேர்வு குறைவாக இருக்கலாம், ஆனால் வாக்களிக்கும் உரிமை உங்களிடத்தில் உள்ளது. நாங்கள் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அவையின் பங்கை ஆற்ற முடியாது” என்றார்.

X