

மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை பெண் ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு, சிலை நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
இன்று கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி வீட்டிற்கு வெளியே துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பந்தலில் துர்கா பூஜையை தொடங்கி வைப்பதற்கான மம்தா பானர்ஜி வந்துள்ளார். அப்போது பெண் ஒருவர் மம்தாவின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை சோதித்த போது, சேலைக்குள் கத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மம்தா பானர்ஜி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மம்தா பானர்ஜி கலந்து கொண்ட இடத்திற்கு இளம் பெண் ஒருவர் கத்தியுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.