நோய் பாதித்த கணவரை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி கைது

போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜோஸ் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரிப்பள்ளி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
நோய் பாதித்த கணவரை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி கைது
Published on: 

கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் துவாயூர் ஆனைமுக்கு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் டேனியல் (வயது64). இவரது மனைவி மரியம்மா ஜோஸ்(59). இவர்களது மகன் ஜிஜி. அவர் தனது மனைவியுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இதனால் வயதான தம்பதியான ஜோஸ் டேனியலும், அவரது மனைவி மரியம்மாவும் கொல்லம் மாவட்டம் சாஸ்தம் கோட்டை பொரு வாழி சத்தக்குளம் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தனர். ஜோஸ் டேனியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்படும் “பார்கின்சன்” என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 2 மாதங்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மனைவி மரியம்மா பராமரித்து வந்தார்.

ஆஸ்பத்திரி

இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி மயக்க நிலையில் ஜோஸ் டேனியலை, அவரது மனைவி மரியம்மா பரணிக்காவு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாடக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரி மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் ஜோஸ் டேனியல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரியம்மா தெரிவித்துள்ளார். ஆனால் ஜோஸ் டேனியலின் கழுத்தில் இருந்த தழும்பு மற்றும் உடலில் சிறிய வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த டாக்டர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார்

போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜோஸ் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரிப்பள்ளி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஜோஸ் டேனியலின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சாஸ்தம் கோட்டை சத்தக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு மரியம்மா இல்லை. விசாரணயைில் அவர் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் உள்ள தனது மகனுடைய நண்பருக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த அவரை போலீசார் கண்டுபிடித்தனர்.

கைது

அவரிடம் விசாரணை நடத்தியதில் கணவர் ஜோஸ் டேனியலை கழுத்தை நெரித்து கொன்றதை மரியம்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கணவரை கவனிக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டதால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி ஜோஸ் டேனியலை, பிளாஸ்டிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின்பு அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காண்பிப்பதற்காக மரியம்மா தனது கணவரின் உடலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com