வாட்ஸ்அப்பில் மீடியா ஃபைல்கள் அனுப்ப உலகளவில் சிக்கல்: புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதில் தாமதம்!

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக எதிரொலித்துள்ளது.
WhatsApp
Published on

மெட்டா நிறுவனத்தின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்ட ஊடகக் கோப்புகளைப் (Media Files) பகிர்வதில் உலகளவில் பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே, பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் மீடியா ஃபைல்களை அனுப்ப இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பயனர்களுக்கு சாதாரண உரைச் செய்திகள் தடையின்றிச் சென்று சேர்கின்றன. ஆனால், படங்கள், வீடியோக்கள் அல்லது ஸ்டிக்கர்களை அனுப்பும்போது அவை 'அப்லோட்' ஆகாமல் நீண்ட நேரம் நின்றுவிடுகின்றன. இணைய சேவை தடைகளைக் கண்காணிக்கும் டவுன்டெடெக்டர் தளத்தின் தரவுகளின்படி, பதிவான புகார்களில் 41% செய்திகள் அனுப்புவதிலும், 40% செயலியின் இயக்கத்திலும், 13% நோட்டிபிகேஷன் பிரிவிலும் சிக்கல்கள் உள்ளதாகக் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்ட நாடுகள்

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக எதிரொலித்துள்ளது.

பயனர்களின் புலம்பல்

பயனர்கள் பலர் தங்களது போன்களை ரீஸ்டார்ட் செய்தல், வைஃபை (Wi-Fi) மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றி அமைத்தல், செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்தல் போன்ற நடைமுறைகளைச் செய்தபோதிலும் இந்த மீடியா பகிர்வு சிக்கல் தீரவில்லை. இதனால், பலரும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்களுடனும் புகார்களுடனும் தங்களது அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தத் திடீர் சேவைத் தடை குறித்து வாட்ஸ்அப் அல்லது மெட்டா நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிக்கை தகவலோ வெளியடப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் குழுவினர் இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com