கொல்கத்தா வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்த நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து
Published on

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.

தீ விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வணிக வளாகத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை பத்திரமாக மீட்டனர். கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கி இருப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com