ஜனநாயகம் கொல்லப்படுவதை ஒருபோதும் பொறுத்து கொள்ளமாட்டோம்: இளைஞர்களுக்கு பிரகாஷ் ராஜ் அழைப்பு

கொச்சியில் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Prakash Raj urges youth to unite for democracy at Kochi protest.
Published on: 
Summary

கொச்சியில் நாளை நடைபெறவுள்ள எஸ்.ஐ.ஆர் எதிராக ஆர்ப்பாட்டத்தில் மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட முயன்றது.

அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி, சிஜேபி நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் டெல்லியின் சில முக்கிய பகுதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, தடை செய்யப்பட்ட பகுதியாகவும் டெல்லி காவல்துறை அறிவித்தது.

கொச்சியில் போராட்டம்

இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் நாளை (சனிக்கிழமை) எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொச்சியில் நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, தெற்கு மண்டல தலைவர் விஜய் மல்லாங்கி மற்றும் தேசிய செயலாளர் ஆஃப்ரீன் நவாஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ’நமது ஜனநாயகத்தை காப்பாற்ற குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பிரகாஷ் ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனநாயகம் கொல்லப்படுவதை பொறுத்துகொள்ள மாட்டோம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவது மிகவும் முக்கியம்.

ஜனநாயகம் கொல்லப்படுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என கூறியுள்ளார்.

மேலும், கொச்சியில் ராஜேந்திர மைதானத்தில் மாலை 4 மணி முதல் நடைபெறவுள்ள போராட்டத்தில், மக்கள் அமைதியான முறையில் கலந்துகொள்ளுமாறும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

X