மேற்கு வங்கம், அசாம், புதுவையில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரம்

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
 வாக்கு எண்ணிக்கை
Published on: 
Summary

மேற்கு வங்கம், அசாம், புதுவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதேபோல புதுவையில் தட்டான்சாவடி தொகுதி, மேற்கு வங்கதத்தில் தொகுதி, அசாமில் ஒரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கம்

அதேவேளை கடந்த 6 ஆம் தேதி அன்று மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்டசபை தொகுதியிலும், முர்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்ற 2 தொகுதிகளில், ராஜினாமா செய்த தொகுதி நந்திகிராமில் அவரது முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹாசி ராணிரத், பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.

மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் அணியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.

அசாம்

அசாம் மாநிலம் நகோன் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசை சேர்ந்த பிரத்யுத் போர்டோலாய் நடப்பாண்டின் தொடக்கத்தில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால், காலியாக உள்ள நகோன் மக்களவை தொகுதியிலும் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

பாஜக வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவாஷிஸ் சர்மா, காங்கிரஸ் வேட்பாளராக சிபமோனி போரா இடையே அங்கு போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தின் 2 தொகுதிகளோடு, மேற்கு வங்கம், அசாமில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதேநேரம் புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com