VIDEO OF THE DAY : ஆதார் கார்டுக்கு அழகழகாக போஸ் கொடுத்து அசத்திய சிறுமி

ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது.மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.
VIDEO OF THE DAY : ஆதார் கார்டுக்கு அழகழகாக போஸ் கொடுத்து அசத்திய சிறுமி
Published on

இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறிப்போன ஆதார் கார்டு போட்டோ நன்றாக இல்லை என்ற கவலை பலருக்கு உண்டு. இருட்டடித்த போட்டோக்களும், நேரில் இருக்கும் மனிதர்க்கு சுத்தமாக சம்பந்தமாக இல்லாத வகையில் ஆதார் கார்டில் அவரது போட்டோ உள்ளது என்ற அபிப்பிராயங்கள் பரவலாக உள்ளன.

இந்நிலையில் ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. முதல் முதலாக அந்த சிறுமிக்கு ஆதார் கார்டு பதிய ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர். அப்போது தனது கன்னத்தில் கை வைத்தும் பல வழிகளில் அந்த சிறுமி உற்சாகமாக போஸ் கொடுத்த்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் 18  மில்லயன் பார்வைகளைத் தாண்டி கலக்கி  வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com