வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

வல்லபாய் படேலின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாளானது கடைப்பிடிக்கபடுகிறது.
pm modi
Published on: 

இந்தியவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்.31ம் நாள் கொண்டாடப்படுகிறது.

மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

வல்லபாய் படேலின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தேசிய ஒற்றுமை நாளானது கடைப்பிடிக்கபடுகிது.இதனையொட்டிகுஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான 'ஒற்றுமையின் சிலை' (ஒற்றுமை சிலை) வளாகத்தில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.வல்லபாய் படேல் சிலைக்கு பால் ஊற்றி பாத பூஜை செய்தி மலர்களை தூவி வணங்கி பிரதமர் மோடி அங்சலி செலுத்தினார். ஹெலிகாப்ட மூலம் மலர் தூவி மரியாதையானது செலுத்தப்பட்டது

இது குறித்து தனது சமூகவலைதள பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருந்தாவது

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், 'அகண்ட பாரத'த்தின் சிற்பியும், தேசத்தின் 'இரும்பு மனிதரு'மான அவருக்கு மனமார்ந்த வணக்கங்கள். வலிமையான, வளமான மற்றும் திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதற்காக அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்தார். பாரத மாதாவிற்கு அவர் ஆற்றிய சேவையில் வெளிப்பட்ட தியாகமும் அர்ப்பணிப்பும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பெரும் ஊக்கமூட்டும் ஆதாரமாகத் திகழ்கின்றன.

என்று தெரிவித்திருந்தார்.

புதிய திட்டங்கள் நாட்டுக்கு அர்பணிப்பு

இந்த அஞ்சலி நிகழ்வின் ஒரு பகுதியாக, ஏக்தா நகரின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரூ. 400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, சில திட்டங்களை அர்ப்பணித்தார்

கோரா-பாந்த்ரா சாலை மேம்பாடு, ஒருங்கிணைந்த ஸ்மார்ட் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு, கல்வானி சூழல் சுற்றுலாத் திட்டம் (Khalwani Eco-Tourism), மற்றும் கற்றாழை & பட்டாம்பூச்சி பூங்காக்களின் (Cactus and Butterfly Garden) ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஒற்றுமை தின அணிவகுப்பைப் பார்வையிட்டு, நாட்டு மக்களுக்கு ஒற்றுமைக்கான உறுதிமொழியை ஏற்றி வைத்தார். இந்த ஆண்டு அணிவகுப்பில் ஆயுதமேந்திய நக்சலிசத்தை ஒழிப்பதில் பாதுகாப்புப் படைகளின் சாதனைகள் முக்கிய கருப்பொருளாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்.31ம் நாள் கொண்டாடப்பட்கிறது.இவரது பிறந்தநாள் இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒற்றை இந்தியாவை உருவாக்கியதில் இவரது பங்கு முக்கியமானது.சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X