

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து, இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களைக் கொண்ட ஓர் அபூர்வமான பாம்பு மீட்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 6 அங்குல நீளம் கொண்ட இந்தப்பாம்பு தான்பூர் தாலுகாவில் உள்ள அகஸ்வானி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது.
உள்ளூர் மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததையடுத்து, 'தாஹோத் பிரகிருதி மித்ரா மண்டல்' அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பாம்பிற்கு சுமார் ஒரு வயது இருக்கும் என வனவிலங்கு மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். அதன் பாதுகாப்பையும் உரிய பராமரிப்பையும் உறுதிசெய்ய அக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.