திரிணாமுல் கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்: பா.ஜ.க.வை சாடிய அபிஷேக் பானர்ஜி

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
abhishek banerjee
Published on
Summary

கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதன்பின், அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர்.

கட்சி அலுவலகம் சூறை

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆபீசுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். சிலர் அலுவலகத்தில் இருந்த டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களைத் தூக்கிச்சென்றது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அபிஷேக் பானர்ஜி கண்டனம்

இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

அதிகாலை 4.30 மணியளவில் கொல்கத்தாவின் மையத்தில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை ஆயுதங்களுடன் பா.ஜ.க. குண்டர்கள் முற்றுகையிட்டனர்.

அவர்கள் எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்கினர், அவர்களின் தொலைபேசிகளைப் பறித்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வளாகத்தைச் சூறையாடி மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தினர்.

கொல்கத்தா காவல்துறை எங்கே இருந்தது? கிட்டத்தட்ட 2 மணி நேரம், எங்கள் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் பலமுறை போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் இல்லை. இது மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com