

போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எங்கிருந்து எங்கு சென்று கொண்டு இருந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சந்திரகிரி சுங்கசாவடி அருகே 6 வழி சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது.
காரில் 4 பேர் இருந்தனர். வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர் திசை சாலைக்கு சென்றது.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எங்கிருந்து எங்கு சென்று கொண்டு இருந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.