என் மலர்
இந்தியா

ராமர் கோவில் மீது குண்டுகளை வீசி முஸ்லீம்கள் மீது பழி போடுவார்கள்- பா.ஜ.க மீது காங்கிரஸ் எம்.எல். ஏ. கூறிய கருத்தால் சர்ச்சை
- பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
- பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருந்து வருபவர் பி.ஆர். பாட்டீல். இவர் பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற அவர்கள் (பா.ஜனதா)ராமர் கோவில் மீது குண்டுகள் வீசி முஸ்லீம்கள் மீது பழி சுமத்துவார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது கர்நாடகாவில் பரபரப்பாகி உள்ளது. இது தொடர்பாக பாரதியஜனதாவினர் கூறும் போது இந்து-முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீல் கருத்து தெரிவித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story






