‘இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது’ - மம்தா பானர்ஜி!

இன்று நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து திருமாவளவன் கலந்துகொண்டார்.
‘இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது’ - மம்தா பானர்ஜி!
Published on: 

டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் இன்று இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் உமர் அப்துல்லா, விசிகத் தலைவர் திருமாவளவன் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி கூறியதாவது;

“எங்கள் ‘இந்தியா’ கூட்டணி ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இன்று ஒரு மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது; இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குத்திருட்டு குறித்து ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நீங்கள் அறிவீர்கள். வாக்குத் திருட்டால் பாஜக மத்தியப் பிரதேசம், பீகார், ஹரியானாவில் வெற்றிப் பெற்றதை அனைவரும் அறிவோம். ஆனால் மேற்குவங்கம் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த திருட்டை தடுக்க அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடினோம். அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தோம்.

ஆனால் இப்போது ஞானேஷ் குமார் ஒரு திருடன் என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

அவர் வாக்குகளைத் திருடியது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றியது மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்தது ஆகியவை அம்பலமாகியுள்ளன. எனவே, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com