இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை பரிசளித்த சிறுவன்

புகைப்படம் ‘எக்ஸ்’ தளத்தில் வைரலாகி வருகிறது.சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை பரிசளித்த சிறுவன்
Published on

சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை ஒரு சிறுவன் பரிசளித்துள்ளான்.

இதுகுறித்த புகைப்படம் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது. சந்திரயான்-3 பயணத்தின் போது சந்திரனுக்கு எடுத்து செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் மாதிரியை அந்த சிறுவன் மிக நுணுக்கமாக வடிவமைத்து சோம்நாத்திடம் வழங்கி உள்ளான். சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விண்வெளி ஆய்வில் ஏற்படுத்தி ஆழமான தாக்கத்துக்கு இது ஒரு சான்றாக இருப்பதாக பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com