

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகா சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வீரர்கள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூன்று வீரர்களும் உடனடியாக அருகில் உள்ள அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.