மாணவரின் மொட்டை தலையில் தபலா வாசித்த ஆசிரியர் - இணையத்தில் சர்ச்சை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரெளலி தொடக்க பள்ளியில் உதவி ஆசிரியராக தினேஷ் மாத்தூர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
Dinesh Kumar Mathur - assistant teacher
Published on: 
Summary

உத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவரின் மொட்டை தலையில் ஆசிரியர் தபலா வாசித்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை வட்டாரத்தில் உள்ள பிரெளலி தொடக்க பள்ளியில் உதவி ஆசிரியராக தினேஷ் மாத்தூர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

உதவி ஆசிரியர்

இவர் தனது வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மாணவர் ஒருவரின் தலையில் தபலா வாசிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த காணொளியில், உதவி ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரின் கால்களுக்கு இடையில் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் மாணவன் ஒருவன் முழங்காலில் நிற்பது பதிவாகியுள்ளது.

தபலா வாசித்த ஆசிரியர்

இதையடுத்து ஆசிரியர் அந்த மாணவரின் தலையில் தனது விரல்களால் தபலா வாசிப்பதும், அதை வகுப்பில் உள்ள மாணவர்கள் பார்த்து கொண்டிருப்பதும் வெளியாகியுள்ளது.

உதவி ஆசிரியர் மாணவரின் தலையில் சிரித்துக் கொண்டே தபலா வாசிப்பதும், வீடியோவில் பதிவாகியுள்ளது.

இணையத்தில் சர்ச்சை

இதையடுத்து இந்த காணொளி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த காணொளி பார்ப்பதற்கு வேடிக்கையாக தோன்றினாலும், அந்த குழந்தை மற்ற மாணவர்களுக்கு மத்தியில் அவமானத்துடன் உணர்வதாக பயனர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த வீடியோவிற்கு பயனர் ஒருவர், இந்த வகையான செயல்கள் சிறு வயது குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக்கூடும் என பதிவிட்டார்.

பயனர்கள் கண்டனம்

மேலும் அவர், இதை சம்பவம் வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கு தவறான முன் உதாரணமாக அமையும் என்றும் பதிவிட்டார்.

மற்றொரு பயனர், இது ஒரு குழந்தையின் மனநிலையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் உணரவில்லை. அவன் எவ்வளவு அவமானப்பட்டிருப்பான்.

இது மிகவும் தீவிரமானது; இப்படிப்பட்ட ஒருவர் ஆசிரியராக இருக்கக்கூடாது. ஒரு ஆசிரியர் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும் என்று பதிவிட்டார்.

கல்வித்துறை நடவடிக்கை

இந்த சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, ஆசிரியரின் செயல் குறித்து கல்வித்துறைக்கு புகார்கள் குவிந்தன.

இதையடுத்து உதவி ஆசிரியரான தினேஷ் மாத்தூரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அடிப்படை கல்வி அதிகாரி (பிஎஸ்ஏ) டாக்டர் ராஜேஷ் குமார் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com