

வால்மீகி கார்ப்பரேசன் நிதி தொடர்பான மோசடி வழக்கு தொடர்பாக மந்திரி பதவியை இழந்தவருக்கு, மீண்டும் பதவி வழங்கப்பட்டதால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது பதவியை பி நாகேந்திரா ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் சித்தராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த பி. நாகேந்திரா, சிவக்குமார் தலைமையில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட மந்திரி சபையில் இடம் பிடித்திருந்தார். வால்மீகி கார்ப்பரேசன் முறைகே வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சரவையில் இருந்த விலக வேண்டும் என்ற பாஜக வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில்தான் அமைச்சர் பதவியை பி. நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பி. நாகேந்திரா கூறியதாவது:-
வால்மீகி பரிமாற்றத்தில் என்னுடைய கையெழுத்து எங்கேயாவது இருக்கிறதா?. நான் தலித் என்பதால் டார்கெட் செய்யப்பட்டுள்ளேன். குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகளில் வங்கிகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, தன்னை ஏன் இதற்கெல்லாம் பொறுப்பாக்குகிறார்கள். அப்படியானால் மத்திய நிதியமைச்சர்தான் இதற்குப் பொறுப்பா?. கர்நாடக மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் தினமும் ஆயிரம் பொய்கள் சொல்லப்படுகின்றன.
இவ்வாறு பி. நாகேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை எழுந்தபோது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, ஜூன் 2024-ல் அமைச்சரவையிலிருந்து விலகினார். பின்னர் ஆகஸ்ட் 3, 2026 அன்று திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையின் அமைச்சராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். இது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது.
தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை நாகேந்திரா முன்னரே மறுத்திருந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறி வந்தார். அத்துடன், பாஜக-வைக் குறிக்கும் வகையில் "மனுவாதிகள்" (Manuvadis) என்பவர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.