‘காங்கிரஸ்தான் என்னை விலகுமாறு கேட்டுக்கொண்டது’ - கர்நாடகா சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!

பசவராஜ் ஹொரட்டி ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் கோரியதாக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவரிடம் தெரிவித்துள்ளார்.
‘என்னை ஏன் காங்கிரஸ் விலகச்சொன்னது எனத் தெரியவில்லை’ - சட்டசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!
Published on

காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடக சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,

“ஆளும் கட்சி நான் பதவி விலக வேண்டும் என விரும்புகிறது. முதலமைச்சர் (டி.கே.சிவகுமார்) என்னிடம் தொலைபேசியில் இரண்டு முறை பேசினார். நேற்று, அவர் என்னை நேரில் சந்தித்து, நான் பதவி விலகுமாறு கூறும்படி கட்சியின் மேலிடம் தனக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.

நான் பதவி விலகாவிட்டால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாம் ‘மரியாதையுடன்’ பதவி விலக விரும்புவதாகவும், ஆகஸ்ட் 14 அன்று ராஜினாமா செய்ய இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டசபை மேலவைத் தலைவரையும், சட்டமன்ற சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பது சபையின் தனிப்பட்ட உரிமை என்றும், கட்சியின் மேலவைத் தலைமையின் உரிமையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com