பா.ஜனதாவுக்கு ஆதரவாக 3 மொழிகளில் கலக்கும் விஜயதரணி

திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.
பா.ஜனதாவுக்கு ஆதரவாக 3 மொழிகளில் கலக்கும் விஜயதரணி
Published on

சென்னை:

முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தமிழகத்தில் தேர்தல் முடிந்ததால் கேரளாவில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

தலைநகரான திருவனந்தபுரத்தில் தமிழர்கள், மலையாளிகள், வேறு மாநிலத்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள்.

எனவே விஜயதரணி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பேசி வாக்கு சேகரிக்கிறார். ஏற்கனவே விஜயதரணி எம்.எல்.ஏ.வாக இருந்த விளவங்கோடு தொகுதியை அடுத்து திருவனந்தபுரம் இருப்பதால் தமிழ், மலையாளம் கலந்து பேசும் மக்கள் பெருமளவு அவர்கள் மத்தியில் இரு மொழிகளையும் கலந்து பேசுகிறார்.

3 முறை தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்ததாகவும் கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் எனவே பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com