6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி
கோவேக்சின் தடுப்பூசி
Published on

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை ரீதியான நிபுணர் குழு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

இந்த நிலையில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com