இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,447 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 320 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 391 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,869 ஆக உயர்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,404 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரத்து 49 ஆக உயர்ந்தது.

அதே நேரம் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரேநாளில் 7,886 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 765 ஆக அதிகரித்தது. மேலும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 86,415 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சுமார் 21 மாதங்களில் இல்லாத அளவில் சரிவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 320 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 391 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,869 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் நேற்று 70,46,805 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 135 கோடியே 99 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 12,59,932 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 66.15 கோடியாக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com