138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.
138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை
Published on

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com