ஆந்திராவில் இரவுநேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிப்பு

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.
இரவுநேர ஊரடங்கு
இரவுநேர ஊரடங்கு
Published on

ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இதில் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஆந்திராவில் 31-ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்றை குறைக்கும் வகையில், ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவுநேர ஊரடங்கை பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com