மம்தா பானர்ஜிக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி..!

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்களை மறைத்ததாக சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு.
மம்தா- சுவேந்து அதிகாரி
Published on: 
Summary

மேற்கு வங்க அரசியலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் முக்கியமான தகவல்களை மறைத்ததாக கூறி, மம்தா பானர்ஜிக்கு எதிராக புதிய சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் சுவேந்தி அதிகாரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சுவேந்து அதிகாரி கூறியதாவது:-

மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பல முக்கியமான விவரங்களை மறைத்துள்ளார். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது மற்ற வேட்பாளர்கள் சிலர் இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால், அப்போதைய தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த ஆட்சேபனைகளை நிராகரித்து, மம்தாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் அதிகாரி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்

இதுதொடர்பாக மம்தா மட்டுமின்றி, வேட்புமனுவை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடர இருக்கிறோம்.

இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

X